நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித்குமார் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச்..வினோத் இயக்குகிறார்.
இப்படத்தின் 90 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள காட்சிகள் விரைவில் எடுத்துமுடிக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.
வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக்கை மே 1-ந் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்த படக்குழு, பின்னர் அதனை கொரோனாவால் தள்ளிவைத்துவிட்டனர்.
ஆகஸ்டு மாதம் வலிமை படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்து இருந்தனர். தற்போதைய நிலையில் அதற்கு வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
ஆதலால் வலிமை படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகிறார்களாம்.
ரஜினியின் அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தல அஜித்தின் வலிமை ரஜினியின் அண்ணாத்த படத்துடன் மோதும் என்று கூறப்படுகிறது.
பேட்ட, விஸ்வாசம் படங்கள் மோதிக்கொண்ட போது, அஜித்தின் விஸ்வாசம் குடும்ப ரசிகர்கள் வெற்றிபெற்றது. இருந்தலும் பொறுத்திருந்து பார்ப்போம் இந்த முறை யார் ஜெயிக்க போகிறார் என்று.




















