அத்தியவசிய பொருட்களை கொள்வதற்காக பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்திய இன்றைய தினத்தில் பலர் நடந்துக்கொண்ட விதம் குறித்து மகிழ்ச்சியடைய முடியாது என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனால், எதிர்காலத்தில் கடைகளை திறக்காமல் அதற்கு பதிலாக மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனடிப்படையில், அத்தியவசிய பொருட்களை வாகனங்கள் மூலம் விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமது வீடுகளுக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வழங்கிய சந்தர்ப்பத்தை சிலர் தவறாக பயன்படுத்திய விதத்தை காணக் கூடியதாக இருந்தது.
மக்கள் இப்படி கட்டுப்பாட்டின்றி நடந்துக்கொண்டுள்ளதால், பாதிப்பான பிரதிபலகள் ஏற்படும். மக்கள் கட்டுப்பாடு இன்றி நடந்துக்கொள்வதன் ஊடாக கோவிட் பரவல் மேலும் அதிகரிக்கலாம் எனவும் இராணுவ தளபதி எச்சரித்துள்ளார்.



















