இலங்கையில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் அமெரிக்கா 13 மில்லியன் ரூபாய் பெறுமதியான 4 ஆயிரத்து 700 பி.சி.ஆர் பரிசோதனை கருவிகளை அன்பளிப்பு செய்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதரக பிரதிநிதிகள், சுகாதார அமைச்சில் வைத்து இந்த பி.சி.ஆர் கருவிகளை வழங்கியதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
ராஜாங்க அமைச்சர் மருத்துவ சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, பேராசிரியர் சன்ன ஜயசுமன உட்பட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளனர்.



















