இலங்கையில் டீசல் மற்றும் பெற்றோலின் விலைகளில் விரைவில் மாற்றம் ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சந்தையில் எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு குறித்து கடந்த 23ஆம் திகதி மத்திய வங்கி உயரதிகாரிகளுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பில், எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டும் என்கின்ற யோசனையை மத்திய வங்கி அதிகாரிகள் முன்வைத்திருப்பதாக அறியமுடிகின்றது.
எனினும் அரசாங்கத்தின் இறுதி முடிவு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.