இலங்கையில் எதிர்வரும் சில நாட்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் இருப்பதாக அமெரிக்க வெளிவிவகாரப் பிரிவினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்கப் பிரஜைகளுக்கு, இலங்கைக்கு செல்வதை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளும்படி அமெரிக்க அரசாங்கம் நேற்று அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையிலேயே மேற்படி எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, சுற்றுலாப் பயணிகள் நடமாடும் இடங்கள், போக்குவரத்து நிலையங்கள், ஹோட்டல்கள், கலாசார உற்வசங்கள் என மக்கள் ஒன்று திரளுகின்ற இடங்கள் மிகவும் ஆபத்தானவை என்றும் அதைல் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.