யாழ்ப்பாணத்தில் நேற்று வீசிய பலத்த காற்றினால் தெல்லிப்பழை கிழக்கில் உள்ள வீடொன்றின் மேல் தென்னை மரம் விழுந்து வீட்டின் முன்புறம் சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் இன்று வீசிய காற்று காரணமாக கட்டுவன் மேற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடொன்றின் மேல் பனை மரம் முறிந்து விழுந்ததில் வீட்டின் ஒரு அறை, மலசலகூடம், இரண்டு கோழிக்கூடுகள் என்பன சேதமடைந்துள்ளன.
இருப்பினும் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.



















