கோவிட் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட நபர் ஒருவர் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார் என அடையாளம் காணப்பட்டுளு்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது. அவர் தொடர்பில் ஏதாவது தகவல் அறிந்தால் 0718591579 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
கொள்ளுபிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.



















