நோர்வேயில் இயங்கிவரும் ஒஸ்லோ போய்ஸ் சமூக நலன்புரி அமைப்பினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவரும் கோவிட் இடைத்தங்கல் பிரிவிற்கு பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
2.2 மில்லியன் பெறுமதியான உயிர்காக்கும் இயந்திரங்கள் ஒஸ்லோ சமூக நலன்புரி அமைப்பு சார்பாக கலாநிதி ஜீ. கென்னடியால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் க.கலாரஞ்சினியிடம் கையளிக்கப்பட்டது.
இவற்றில் மூன்று ஒட்சிசன் செறிவாக்கல் இயந்திரங்கள் அடங்குவதுடன், மேலும் சில இயந்திரங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
அதேவேளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே மாகாணத்திலுள்ள அனைத்து கோவிட் நோயாளிகளுக்குமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது