சென்னையில் பிரபல தனியார் பள்ளி ஆசிரியரின் வன்கொடுமை செயலை பல மாணவர்கள் வெளிப்படையாக கூறியதையடுத்து, அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல தகவல்களை வாக்குமூலமாக வெளியிட்டுள்ளார்.
சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் (பி.எஸ்.பி.பி) பள்ளியின் மாணவர்கள் பலர் அப்பள்ளியில் பணிபுரியும் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது வன்கொடுமை புகார்களை முன் வைத்துள்ளனர்.
நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் அவரது மகள் மதுவந்தி ட்ரஸ்சியாக உள்ள இந்த பள்ளி ஆசிரியர் மீதான புகார் பூதாகாரமானதை அடுத்து பல அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் பொதுமக்கள் என தங்களது ஆதங்கத்தினை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, ஆசிரியர் ராஜகோபாலனை பிடித்து சென்னை பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பள்ளி முதல்வர் இந்திரா மற்றும் தாளாளர் ஷீலா ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தப்படுகின்றது.
பொலிசாரின் விசாரணையில் ராஜகோபாலன் பல தகவல்களை வாக்குமூலமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இதோ போன்று, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகளிடம் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், தன்னைப் போலவே சில கருப்பு புள்ளிகள் அங்கு இருப்பதாக கூறியுள்ள வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆன்லைன் வகுப்பின் மூலம் மாணவிகளின் வாட்ஸ்ஆப் எண்களை பெற்றுக்கொண்ட இவர் அந்தரங்க புகைப்படங்களை அனுப்புவது, தவறாக சேட் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த 27 ஆண்டுகளாக இப்பள்ளியில் வேலை செய்து வரும் இவருக்கு தற்போது வயது 60 ஆகும் நிலையில், தன்னுடைய லீலைகளை அரங்கேற்றியுள்ளார். தன்னை பணியிடை நீக்கம் செய்ததை அறிந்த இவர், உடனே தனது மொபைல், லேப்டாப் என அனைத்திலும் உள்ள புகைப்படங்களை அழித்துள்ளார்.
தற்போது தடயவியல் சோதனைக்கு அனுப்பி திரும்ப பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், குறித்த ஆதாரங்கள் கிடைத்தால் இச்சம்பவம் தமிழகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமேயில்லை.
ஜாமீனில் வெளியே வரமுடியாத அளவிற்கு போக்சோ சட்டம் 12ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வன்கொடுமை புகாரில் சிக்கியிருக்கும் ராஜகோபால், பள்ளி சார்பில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட வன்கொடுமை புகார்கள் தொடர்பான குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார் என்ற தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



















