சென்னையில் பிரபல தனியார் பள்ளி ஆசிரியரின் வன்கொடுமை செயல் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
சென்னை கே.கே நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பள்ளி மாணவிகள் வன்கொடுமை செயல் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த வன்கொடுமை புகார்களில் ஒன்றாக ஒரு மாணவி அவர் ஆன்லைன் வகுப்புகளுக்கு வெறும் டவல் மட்டுமே கட்டிக்கொண்டு வருவார் என கூறி அதை நிரூபிக்க புகைப்படத்தினை வெளியிட்டு அம்பலப்படுத்தியது தான் பெற்றோர்களின் மனதினை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணைக்கு பின்னர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னுடன் சேர்ந்து பல கறுப்பு ஆடுகள் இருப்பதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து தற்போது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவுகள் சிலவற்றை பிறப்பித்துள்ளார்.
அதில், “மாணவ மாணவிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் அதனை பதிவு (record) செய்ய வேண்டும். பதிவுசெய்யப்பட்ட ஆன்லைன் வகுப்பு வீடியோக்களை அவ்வப்போது பெற்றோர், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் ஆய்வு செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.




















