ராதிகா சரத்குமார் வெளியிட்ட ஒர்க்அவுட் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அசந்து போய்விட்டனர்.
உங்களுக்கு இரண்டு பேரக்குழந்தைகள் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறீர்கள் என்கிறார்கள்.
ராதிகா ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் தானும், சரத்குமாரும் ஒர்க்அவுட் செய்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டார் ராதிகா. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வியந்துவிட்டனர்.
மேலும் சரத்குமார் அப்பாவும், நீங்களும் இன்று போன்று என்றும் ஒற்றுமயைாக இருக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
இது தான் உண்மையான மோட்டிவேஷன். இனி நாங்களும் ஒர்க்அவுட் செய்வோம் ராதிமா என ரசிகர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக முழு நேர அரசியலில் ஈடுபடப் போகிறேன் என்று ராதிகா அறிவித்ததை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை எச்சரித்தார்கள்.
உங்களுக்கு அடுத்தவர்களை தாக்கிப் பேசத் தெரியாது, அரசியலுக்கு போனால் அசிங்கப்படுத்துவார்கள், தேவையில்லாத விஷயங்களை எல்லாம் பேசுவார்கள், வேண்டாம் ராதிமா என்று எச்சரித்தார்கள்.
ஆனால் கணவருக்காக துணிந்து அரசியலுக்கு வந்தார் ராதிகா.
A Sunday morning, surrounded with good energy and what’s good for you and of course did not resist my Godiva❤️❤️❤️❤️ pic.twitter.com/EzwRykopwh
— Radikaa Sarathkumar (@realradikaa) May 24, 2021




















