சென்னை PSBB பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து குறித்த ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களும், திரையுலக பிரபலங்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல மருத்துவரும், ரோஜா சீரியல் நடிகையுமான ஷர்மிளா இதுகுறித்து டுவிட் செய்திருந்தார்.
அப்போது, ஒரு சிலர் நீங்களும் பிறப்பால் பிராமணர் தானே என கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஷர்மிளா, பிராமணன்னா பெரிய கொம்பா. பிறப்பால் உயர்ந்தவன் எவனுமே கிடையாது.ஒருவரின் மனிதமும் நற்பண்பும் தான் அவரை உயர்த்தும்.மனிதமும்,சமூகநீதியுமே எனது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர என் ஜாதியல்ல என தெரிவித்துள்ளார்.
பலர் என்னை கேட்கும் கேள்வி : நீங்கள் பிறப்பால் பிராமணர் தானே…நீங்களே இப்படி பேசலாமா??!
பதில்: பிராமணன்னா பெரிய கொம்பா.பிறப்பால் உயர்ந்தவன் எவனுமே கிடையாது.ஒருவரின் மனிதமும் நற்பண்பும் தான் அவரை உயர்த்தும்.மனிதமும்,சமூகநீதியுமே எனது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர என் ஜாதியல்ல
— Dr Sharmila (@DrSharmila15) May 25, 2021



















