இன்றிரவு முதல் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாளையும் நாளை மறுதினமும் பொருளாதார மத்திய நிலையங்கள் திறந்திருக்கும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும் உணவு, காய்கறி, மீன் உட்பட அத்தியவசிய பொருட்களை விநியோகிக்கும் லொறி மற்றும் வாகனங்களுக்கு மாத்திரமே இந்த அனுமதி வழங்கப்படும்.
இதற்கு விசேட அனுமதிப் பத்திரம் தேவையில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.