நடிகரும், தயாரிப்பாளருமான வெங்கட் சுபா அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
அவரது மரண செய்தி கேட்ட பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
படங்களிலும் நடித்துள்ள வெங்கட் சுபா சீரியல்களில் நடித்துள்ளார், குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தின் அப்பா முன்பு நடித்திருக்கிறார்.
நடிப்பை தாண்டி வெங்கட் சுபா அவர்கள் சில வெற்றிப் படங்களை தயாரித்தும் உள்ளார்.
பிரபலங்களின் மரண செய்திகள் அடுத்தடுத்து சினிமா ரசிகர்கள் கடும் துக்கத்தில் உள்ளனர்.