யாழ் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான ((ELTC) திருமதி. ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரின் உயிரிழப்பானது கொவிட் – 19 தொற்றினால் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருமதி. ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி விரிவுரையாளராக பல்கலைக்கழக வாழ்வில் மறக்க முடியாத பல்லாயிரம் மாணவர்களுக்கு வழிகாட்டிய மிக சிறந்த அன்புக்குரிய விரிவுரையாளராக பணியாற்றியவர்.
இந்நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.