பேஸ்புக்கினூடாக 498,000 ரூபா மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக வெளிநாட்டு பிரஜையொருவர் அட்டிடிய பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபர் தென்கிழக்கு ஆபிரிக்க நாடான மாலவியை சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நேரத்தில் சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின், 5 கிராம் ஐஸ் போதைப்பொருளும் 45 ஆயிரம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் சந்தேக நபர் இன்றைய தினம் புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்.
அவர் பல மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, தங்கியிருந்த கால கட்டத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாகவும், பல வங்கிகளில் கடனட்டைகள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இரண்டு மடிக் கணினிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.