பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெகசின் வீதியை சேர்ந்த நபரொருவர் கொரோனா நோயாளராக இனங்காணப்பட்ட நிலையில், அவரது வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் 28 வயதுடைய சங்கீத் தனுஸ்க எனவும், இவருக்கு கடந்த 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
அதன்படி, கடந்த 28ஆம் திகதி பொரளை பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளும் சுகாதார பிரிவினரும் இணைந்து குறித்த நபரை கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்புவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில் குறித்த நபர் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த நபரை தேடும் பணியில் பொலிஸாரும் சுகாதார பிரிவினரும் செயற்பட்டு வருகின்றனர். மேலும், குறித்த தொற்றாளர் தொடர்பில் தகவல் அறிந்தால் கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி- 0718 591 87 பொரளை பொலிஸ் நிலையம்- 0112 694 019