கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த வருடம் முதல் திரையரங்குகள் அணைத்து மூடப்பட்டது.
இதனால் முன்னணி நடிகர்கள் உட்பட பல திரைப்படங்கள் OTT தளங்களில் நேரடியாக வெளியாகி வந்தது, மேலும் அப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு நடிப்பில் உருவாகியுள்ள FIR திரைப்படம் நேரடியாக Disney Hotstar-ல் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இதற்கு முன் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி திரைப்படமும் நேரடியாக (Zee 5) OTT தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.