வடமாகாணத்தில் மூன்று நாட்களுக்குள் தடுப்பூசி ஏற்றி முடிக்குமாறு இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச வடமாகாண சுகாதார பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுக்கு இன்று கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி ஏற்றும் நிலையத்திற்கு வருகைத் தந்து தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை அமைச்சர் நாமல் ராஜபக்ச பார்வையிட்டுள்ளார்.
இதன்போதே வடமாகாண சுகாதார பணிப்பாளருக்கு குறித்த உத்தரவினை விடுத்துள்ளார்.
அமைச்சரின் குறித்த விஜயத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், வடமாகாண ஆளுநர் சார்ள்ஸ், மாவட்ட அரச அதிபர் மகேசன் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.