முல்லைத்தீவு விசுவமடு பகுதி மாணிக்கபுரத்தில் கஞ்சாவுடன் மூவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
மாணிக்கபுரம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில் நேற்று சோதனையிட்ட போதே மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 230 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
தர்மபுரம் பகுதியில் இருந்து ஒட்டுசுட்டான் பகுதிக்கு வியாபாரத்திற்காக கஞ்சாவை கொண்டு செல்வதற்கு தயாராக இருந்த நிலையிலே சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.