கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த செலவான பணத்தை, குறித்த நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் பேராசிரியர் டர்னி பிரதீப் குமார இதனைத் தெரிவித்துள்ளார். தீயை அணைப்பதற்கு முன்வந்த நிறுவனங்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.