உடற் பயிற்சிகளுக்காக, கொழும்பு – மருதானை, ஆனந்த சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனை சாவடியை கடந்து செல்ல முற்பட்ட, கொழும்பு பிரதேசத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் மனைவிக்கு அனுமதி வழங்க மறுக்கப்பட்டுள்ளது.
மேற்படி விடயம் தொடர்பில், பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவர் சில நிமிடங்களில் வேறு ஒரு சோதனை சாவடிக்கு இடமாற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.
மருதானை பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட, பொரளை – மருதானை வீதியில் ஆனந்த கல்லூரிக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்திருந்தார்.