கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அடிப்படைவாத கொள்கைகளை பிரசாரம் செய்து வந்த மொஹமட் சஹ்ரான் ஹசீமுக்கு பாதுகாப்பு வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் திருமண பதிவாளர் ஒருவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
55 வயதான இந்த சந்தேக நபர் அம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதல்களில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் சுமார் 500 பேர் வரை காயமடைந்தனர்.



















