திருகோணமலை – மொரவெவ பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரவெவ பிரதேசத்திலுள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வரும் இளைஞரொருவரே நேற்றிரவு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக பொலிஸ் நிலையத்திற்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் உணவகத்திற்கு வெளியே வைத்து குறித்த சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என தெரியவருகின்றது.
குறித்த சந்தேகநபரைக் கைது செய்யப்பட்டு பின் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 22ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்திற்கு வருகை தருமாறும் மொரவெவ பொலிஸார் சந்தேகநபருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.



















