பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ளதால் நெருக்கடியை சந்தித்துள்ள விவசாயிகளின் அறுவடையை விலைகொடுத்துப் பெற்று அவற்றை பொதுமக்களுக்கு இலவசமாகவே வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நாட்டின் பல பகுதிகளிலும் விவசாயத்தில் ஈடுபட்டு அறுவடை செய்த வாழை, மரவள்ளிக்கிழங்கு, மழங்கள் உட்பட பலவித மரக்கறிகளை விற்பனை செய்துகொள்ள முடியாத நிலைமையில் விவசாயிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


















