கேரள மக்கள் பிரியாணி போன்ற கனமான உணவை எடுத்துக் கொண்ட பிறகு அவர்களின் செரிமானத்திற்கும் புத்துணர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும் விதமாக இந்த சுலைமானி டீயை எடுத்துக் கொண்டு வந்துள்ளனர்.
பொதுவாக இந்த சுலைமானி டீயை கேரளா மக்கள் எடுத்து வருவது உண்டு. கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் இந்த சுலைமானி டீ மிகவும் புகழ்பெற்ற ஒன்று. கேரள மக்கள் பிரியாணி போன்ற கனமான உணவை எடுத்துக் கொண்ட பிறகு அவர்களின் செரிமானத்திற்கும் புத்துணர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும் விதமாக இந்த சுலைமானி டீயை எடுத்துக் கொண்டு வந்துள்ளனர்.
பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் லெமன் போன்ற மசாலாப் பொருட்களை சேர்த்து இந்த தேநீர் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு ஆல்கஹால் அல்லாத செரிமான பானம் என்று கூறலாம். இந்த தேநீருக்கு சுலைமானி என்று பெயர். இது ஒரு அரபு வார்த்தை ஆகும். சுலைமானி என்பதற்கு “அமைதியான மனிதன்” என்று பொருள். திருமணம் மற்றும் நிறைய கொண்டாட்டங்களில் ஒரு கனமான உணவுகளுக்கு பிறகு மக்கள் இந்த தேநீரை எடுத்துக் கொள்கின்றனர். இந்த தேநீர் பார்ப்பதற்கு பழுப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். இந்த மசாலா டீயை எப்படி தயாரிக்கலாம் என அறிந்து கொள்வோம்.