பாப்புவா நியூ குனியாவில் சாக்லேட் நிறத்தில் தவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா அருகே உலகின் இரண்டாவது மிகப்பெரிய தீவான பாப்புவா நியூ குனியா என்ற தீவு உள்ளது. இந்த தீவின் பெரும்பகுதி காடுகளால் ஆனது. இங்கு பல வித விதமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் அங்கு சாக்லேட் நிறத்தில் தவளை ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். பொதுவாக தவளைகள் பச்சை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும், ஆனால் இப்படி சாக்லேட் தோல் கொண்ட தவளை மிக அரிய வகை தவளையாகும். இந்த சாக்லேட் தவளையை பார்த்தவர்கள் அதை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வரும் நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை குயின்ஸ்லாந்து மியூசியத்தில் ஒரு கூட்டத்தை நடத்தியது. அதில் இந்த தவலை ஆஸ்திரேலிய ஜர்னர் என்ன உயிரினங்களுக்கான புத்தகத்தில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த வகையை பார்த்தவர்கள் அதை பதிவு செய்து வைத்திருந்தனர். அதன் பின் இது மனிதர்கள் கண்ணில் படாமலேயே பல ஆண்டுகளாக இருந்துள்ளது.
இவ்வாறான நிலையில் தற்போது மீண்டும் மனிதர்கள் கண்ணில் பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான தவளைகள் மிக அடர்ந்து மலைக்காடுகளில்தான் வாழும். அத்துடன் அந்த தவளைகள் அதை விட்டு மனித நடமாட்டம் உள்ள பகுதிக்கு வருவது மிகவும் அரிது என குறிப்பிட்டனர்.
இதேவேளை இந்த தவளைக்கு Litoria Mira என்ற அறிவியல் பெயரை விஞ்ஞானிகள் வைத்தாலும் மக்கள் சாக்லேட் தவளை என்றே அழைக்கின்றனர்.