சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் ரெட்மி நோட் 10எஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவில் அறிமுகமான இரண்டு மாதங்களில் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10 ப்ரோ விலையை உயர்த்தி இருக்கிறது. முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் ரெட்மி நோட் 10 விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரெட்மி நோட் 10 மாடல் விலை ரூ. 500 வரை உயர்த்தப்பட்டது.
அந்த வகையில் தற்போது, ரெட்மி நோட் 10 ப்ரோ மாடல் விலையும் ரூ. 500 உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு 6 ஜிபி + 128 ஜிபி மாடலுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விலை உயர்வை தொடர்ந்து இதன் புதிய விலை ரூ. 17,499 என மாறி இருக்கிறது.