இலங்கையில் நேற்று கண்டறியப்பட்ட கோவிட் தொற்றாளிகளில் அதிகமானோர் கொழும்பில் பதிவாகியுள்ளனர்.
நேற்று நாட்டில் மொத்தம் 3,398 கோவிட் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர்.
இதில் கொழும்பில் 602 தொற்றாளிகள் பதிவானதாக கோவிட் பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கம்பஹாவில் 151 தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.
கண்டியில் 153, காலியில் 176, மட்டக்களப்பில் 104, நுவர-எலியவில் 237, இரத்னபுரியில் 268 குருநாகலில் 302 என்ற எண்ணிக்கையில் தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.