யாழ் . போதனா வைத்தியசாலை சிகிச்சை களத்தில் வைத்திய சேவை பெறும் நோயாளர்களுக்கான மருந்து வகைகள், நாட்டில் நிலவும் கோவிட் -19 நிலைமை காரணமாகத் தபால் மூலம் அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பதில் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
நோயாளர் தமக்குத் தேவையான மருந்து வகைகளை, கீழ் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு, தங்களுடைய முழுப்பெயர், கிளினிக் இலக்கம், முழுமையான விலாசம் மற்றும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம் என்பவற்றை வழங்கினால் மருந்துகள் வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நோயாளர் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கங்கள் 0212214249 0212222261 0212223348.