அவுஸ்திரேலியாவில் புதிதாக ஐந்து பேருக்கு இந்தியாவில் பரவிவரும் உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்று ஆஸ்திரேலியாவில் பரவிவருவதையடுத்து, விக்டோரியா மாநிலத்தில் வரும் 10 ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்டா என பெயரிடப்பட்டுள்ள இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்றால் இதுவரை விக்டோரியாவில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.