மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மட்டும் ஒரே நாளில் கோவிட் தொற்றில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதுடன், கோவிட் தொற்று 95 பேருக்கு இன்று உறுதிப்படுத்தப்பட்டதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
கோவிட் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்து ஏறாவூரைச் சேர்ந்த 58 மற்றும் 68 வயதுடைய இரு பெண்களும், வயதுடைய பெண் ஒருவரும், வாழைச்சேனையை சேர்ந்த 36 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவரும், மட்டக்களப்பு நகர்ப் பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும், வாழைச்சேனை பிறைந்துரைச்சேனையை சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவர் உட்பட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேரும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேரும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேரும், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும் செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும், ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், பட்டிப்பளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேரும், வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும், வெல்லவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும், கிரான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேர் உட்பட 95 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.