கொழும்பில் பலரின் ATM அட்டைகளை பயன்படுத்தி பணம் கொள்ளையடிக்கும் திருடனை கண்டுபிடிக்க பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
குறித்த திருடன் தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தால் மஹரகம பொலிஸ் பொறுப்பதிகாரியின் 0718591645 என்ற இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அந்த சந்தேக நபரின் CCTV புகைப்படங்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. அதனை வெளியிட்ட பொலிஸார் இந்த நபரை அவதானித்தால் அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.