இலங்கையின் பிரதமராக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் என பிரபல சோதிடர் விஜித ரோஹன விஜயமுனி தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் அவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என அவர் கூறியுள்ளார். எனினும் நாமல் ராஜபக்ஷவுக்கு ஒரு நாளும் இலங்கையின் ஜனாதிபதியாகும் அளவிற்கு பலமான கிரக யோகம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ பிறந்த நேரத்திற்கமைய அவருடைய கிரகங்கள் எதுவும் அன்றைய தினம் சக்தி வாய்ந்தவையாக காணப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
இணையத்தளம் ஊடாக வீடியோ ஒன்றை வெளியிட்டு குறித்த சோதிடர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அடுத்த பிரதமராக நாமல் விரைவில் பதவிப் பிரமாணம் செய்வார் என தென்னிலங்கை ஊடகங்கள் சில தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.