வீதியில் ஓடிக்கொண்டிருந்த பொலிஸ் ஜீப்பில் இருந்து குதித்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாணந்துறை வடக்கு பொலிஸின் உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு சார்ஜென்ட் ஆகியோர் உடனடியாக பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த அதிகாரிகள் அலட்சியமாக இருந்தமை மற்றும் சந்தேகத்துக்கு உரியவரை அழைத்துச் செல்லும்போது பொறுப்புடன் செயல்படத் தவறியமை காரணமாகவே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரம் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இவர்கள் மீது ஒழுங்கு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதற்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 42 வயது பொதுமகன் நேற்று ஓடிக் கொண்டிருந்த பொலிஸ் ஜீப்பில் இருந்து குதித்ததால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
தனிமைப்படுத்தல் மற்றும் போக்குவரத்து சட்டங்களை மீறியமைக்காக சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.