14ஆம் திகதிக்கு பின்னரும் பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படுமா என்பது குறித்து இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று காலை சில விடயங்களை தெரிவித்துள்ளார்.
அதன்படி தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஏழாம் திகதி தளர்த்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள போதும் கோவிட் தொற்றுக்கு இலக்காவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் பயணக்கட்டுப்பாட்டை தளர்த்தாது நீடிக்க வேண்டும் எனவும் சுகாதார தரப்பை சேர்ந்த பலராலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை சிங்கள ஊடமொன்றின் நிகழ்ச்சியில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இன்று காலை வரையில் எவ்வித அறிவுத்தலும் வரவில்லை.
14ஆம் திகதிக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் தேவை ஏற்படின் அதனை நடைமுறைப்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.