சன் தொலைக்காட்சியில் அதிக சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் சில சீரியல்களில் இருந்து முக்கிய நடிகர்கள் வெளியேறிய வண்ணம் உள்ளனர்.
இதனால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தப்பட்டார்கள், பிடித்த சில நடிகர்கள் வெளியேறுகிறார்களே என புலம்பி வந்தனர்.
அண்மையில் கூட பூவே உனக்காக சீரியலின் முக்கிய நாயகன் விலகினார். தற்போது இந்த சீரியலில் புதிதாக நடிக்க இருப்பவர் பற்றி ஒரு தகவல்.
விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமான நடிகர் அசீம் பூவே உனக்காக சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம்.
அவரது காட்சிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பே படப்பிடிப்பு செய்ய தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.