கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை கடந்த சில நாட்களாக இந்திய அளவில் குறைந்து வருகிறது.
கடந்த மாதங்கள் எல்லாம் அதிகமாகி வந்த கொரோனா நோய் தொற்று இப்போது படிப்படியாக குறைகிறது.
தமிழகத்தில் மிகவும் குறைந்து வரும் நிலையில் அனைவரும் தடுப்பூசி போடும் முயற்சியில் உள்ளனர்.
பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு அந்த புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள். மக்களையும் விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று கேட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
அவரது மகன் அமீன் தனது அப்பாவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு தடுப்பூசி போட்டுக் கொண்டோம் என பதிவு செய்துள்ளார்.
#vaccinated pic.twitter.com/4CWMD4ggmN
— A.R.Ameen (@arrameen) June 7, 2021