நாடு முழுவதும் காணப்படும் சீரற்ற கால நிலை காரணமாக சிறார்களுக்கு மத்தியில் சுவாச நோய் பரவக் கூடும் என சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சிறார்கள் மத்தியில் மாத்திரமல்லாது, பெரியவர்கள் மத்தியிலும் இந்த சுவாச நோய் பரவக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கோவிட் பரவி வரும் இந்த சமயத்தில் சுவாச நோய்களில் சிக்காது பாதுகாப்பாக இருக்குமாறும் ஹேமந்த ஹேரத் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.