பருத்தித்துறை ஆதிகோயில் கடற்கரைக்கு அருகில் மூன்று பொதிகளில் 96 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினரால் சிறப்பு கள ரோந்து பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது பருத்தித்துறை கடல் வழியாக கடத்தல்காரர்களால் கொண்டு வரப்பட்டு கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கடற்படையினரும், பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.