தமிழ் சினிமாவில் பல நடிகைகள் வட நாட்டில் இருந்து நடிக்க அழைத்து சில காரணங்களால் தமிழ் சினிமாவை ஒதுக்கி வைத்து ஓடிவிடுகிறார்கள். அந்தவரிசையில் தற்போதைய பாலிவுட் முன்னணி நடிகைகளும் இருக்கிறார்கள். அதில் நடிகர் கமல் ஹாசன் நடித்த ஹே ராம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வசுந்தரா தாஸ்.
மணிரத்னம் இயக்கத்தில் இப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார் வசுந்தரா. இதையடுத்து அடுத்த ஆண்டே நடிகர் அஜித்தின் சிட்டிசன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து பின் பாலிவுட் பக்கம் திரும்பினார். நடிகையாக மட்டுமில்லாத பின்னணி பாடகியாகவும் திகழ்ந்தவர் வசுந்தரா தாஸ்.
தமிழில் முதல்வன் படத்தில் சக்கலக்க பேபி பாடலில் ஆரம்பித்து சில்லு ஒரு காதல் மச்சக்காரி பாடல் வரையில் பாடி அசத்தியும் உள்ளார். இதன்பின் 2012ஆம் ஆண்டு திருமணம் செய்தபின் மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் நடித்து ஒருசில ஆண்டுகளே சினிமாவில் நீடித்து வந்தார்.
தற்போது சிட்டிசன் படம் 20 ஆண்டுகள் கடந்து ரசிகர்கள் இதை கொண்டாடி சமுகவலைத்தளத்தில் டிரெண்டாக்கி வந்தனர். அதற்கு வசுந்தரா தாஸ் அவரின் பேஸ்புக் பக்கத்தில் 20 வருட அன்பிற்கு நன்றி என்று கூறி பதிவிட்டுள்ளார். மேலும் அவரின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து நீங்களா இது என்று ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள்.




















