நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு 82 முன்னணி ஹோட்டல்களில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் முதல் வகுப்பு ஹோட்டல்களில் தங்கியிருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கே மதுவரி திணைக்களம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் தங்கியிருக்கும் போது அந்த ஹோட்டல்களுக்கு மதுபானம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள காலகட்டத்தில் நாட்டில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



















