நாட்டின் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 14ஆம் திகதியுடன் முழுமையாக தளர்த்த நடவடிக்கை எடுக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளதாவென ஆராயுமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ள நிலையில், கோவிட் தடுப்பு செயலணிக்கூட்டத்திலும் ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார்.
எனினும் இந்த யோசனைக்கு சுகாதார நிபுணர்கள் தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
விசேடமாக நாட்டின் பொருளாதாரமா அல்லது மக்களின் உயிரா முக்கியம் என்ற தீர்மானத்தை எடுக்குமாறு சுகாதார தரப்பினர் கோவிட் செயலணி பிரதானிகளிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.