காளி கோவிலில் விமானி ஒருவரை நடிகை வனிதா நான்காம் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில் அதை அவர் மறுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜயகுமாரின் மகள் வனிதா. சந்திரலேகா என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான வனிதா அதன்பின்னர் ராஜ்கிரண் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
தன்னுடைய 19 வயதிலேயே நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர்.
அதன்பின்னர் தன்னுடைய காதல் கணவரை பிரிந்த வனிதா ஆந்திராவை சேர்ந்த ஆனந்த் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஒரு மகளை பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் அவரையும் விவாகரத்து செய்தார்.
இதையடுத்து டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பவரை காதலித்து வந்தார். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக கூறி வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
தன்னுடைய இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்த வனிதா 40 வயதில் பீட்டர் பால் என்பவரை காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமான 4 மாதத்தில் பீட்டர் பால் மதுவுக்கு அடிமையானவர் எனக் கூறி அவரை வீட்டைவிட்டு வெளியேற்றினார்.
அவரை முழுவதுமாக பிரிந்துவிட்டதாக வனிதா வீடியோ மூலம் தெரிவித்தார். இந்த நிலையில் பீட்டர் பாலை பிரிந்த வனிதா ஒரு சில மாதங்களில் வட இந்தியாவைச் சேர்ந்த விமானி ஒருவருடன் காதலில் விழுந்ததாகவும், அவரை சமீபத்தில் காளி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் இந்த விடயத்தை அவர் மறுத்துள்ளார். இது குறித்து வனிதா டுவிட்டரில், உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக, நான் சிங்கிளாகவும் availableகவும் இருக்கிறேன்.
எந்தவொரு வதந்தியையும் பரப்ப வேண்டாம் மற்றும் எதையும் நம்ப வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.