கொழும்பு துறைமுக கடலில் எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கொள்கலன் கப்பல், 1,486 கொள்கலன்களில் நைட்ரிக் அமிலம் மற்றும் பிற அபாயகரமான ஐஎம்டிஜி குறியீடு இரசாயனங்கள் எடுத்துச் சென்ற நிலையில் தீ பற்றியதில், கொள்கலன்கள் உட்பட பெரும்பாலான பகுதிகள் எரிந்து நாசமாகியுள்ளது.
அதனை தொடர்ந்து ஏற்பட்ட பெரும் தீயை அணைக்க இந்திய மற்றும் இலங்கை அதிகாரிகள் மேற்கொண்ட கூட்டு முயற்சிகளால் இறுதி நேரத்தில் தீ அணைக்கப்பட்டது.
எனினும் அதன்பின்னர் மீன்கள், கடல் ஆமைகள் மற்றும் பல கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரையொதுங்கியுள்ளன, மேலும் இந்த தீ விபத்தில் கடல் வளம் மாசடைந்துள்ளதுடன், கடல் வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதென, சுட்டிக்காட்டுறார்கள் சூழலியலாளர்கள்.
இந்நிலையில் நீர்கொழும்பு கடற்பரப்பில் கடற்கன்னி ஒன்று கரையொதுங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் காணொளியொன்று பரவி வருகிறது. அகோர முகமுடைய பெண் போல் காட்சியளிக்கும் அந்த விசித்திரமான உருவம் கடற்கன்னியாக இரும்முடியாது என பலர் கூறிவருகின்றனர்.