தீவிரமாக பரவக்கூடிய அல்பா என்ற பிரித்தானியாவின் கோவிட் மாறுபாடு இலங்கையின் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாறுபாடு கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாபிட்டிய ,வாரியயப்பொல, ஹபராது, திஸ்ஸமஹராம, கராப்பிட்டிய, ராகம ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
அதேநேரம் டெல்டா என்ற இந்திய மாறுபாட்டுடன் வாதுவையில் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.