இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நடைபெற உள்ளது. கடந்த மே 26 அன்று நிகழ்ந்த முழு சந்திர கிரகணத்தை அடுத்து சில நாட்களுக்குப் பிறகு இந்த சூரிய கிரகணம் நிகழவிருக்கிறது. நாசா வெளியிட்டுள்ள வரைபடத்தின்படி, சூரிய கிரகணம் இந்தியாவிலும் தெரியும், ஆனால் லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்திலிருந்து மட்டுமே இதை காண முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கிழக்கு அமெரிக்கா, வடக்கு அலாஸ்கா, கனடா மற்றும் கரீபியன், ஐரோப்பா, ஆசியா மற்றும் வடக்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளை மையமாகக் கொண்டவர்கள் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும். பெரும்பாலான பகுதிகளில், 2021 வருடாந்திர சூரிய கிரகண நிகழ்வு 01:42 PM (IST) மணிக்கு தொடங்கி 06:41 PM (IST) மணியளவில் உச்சம் பெறும்.
நேரலையில் பார்ப்பதற்கான விவரங்கள்
NASA மற்றும் timeanddate.com ஆகிய இரண்டும் சூரிய கிரகணம் 2021 இன் நேரடி ஒளிபரப்பிற்கான இணைப்பை வெளியிட்டுள்ளன, இதன் மூலம் இந்த அரிய வானியல் நிகழ்வை நேரடியாக பார்க்கமுடியவில்லை என்றாலும் ஆன்லைனில் இன்று பார்க்க முடியும்.
அரிய நிகழ்வு
நாசாவின் தகவலின்படி, பூமியில் ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒருமுறை வருடாந்திர சூரிய கிரகணங்கள் தோன்றும், அவை சந்திர கிரகணங்களைப் போலன்றி சில நிமிடங்கள் மட்டுமே தெரியும்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து சூரியனின் ஒளியைத் தடுக்கும்போது மொத்த சூரிய கிரகணம் நிகழ்கிறது. ஆனால், சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது, அது சிறியதாக தோன்றுகிறது மற்றும் சூரியனின் முழு பார்வையையும் தடுக்காது. கிரகணம் நிகழும் போது சந்திரனைச் சுற்றி நெருப்பு வளையம் போன்று தோன்றும்.
நாசாவின் தகவலின்படி, வடக்கு மற்றும் தென் துருவங்களிலிருந்து பகுதியளவு சூரிய கிரகணங்களை மட்டுமே காண முடியும் என்பது கவனிக்கத்தக்கது.
கிரகணங்கள் பூமியின் வடிவத்தைக் கண்டறிய உதவியது? நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் கிரகணத்தின் போது சந்திரனைக் கவனித்தபோது, சந்திரனில் பூமியின் நிழலைக் கண்டதாகவும், பூமி வட்டமானது என்பதைக் கண்டுபிடித்ததாகவும் நாசா கூறுகிறது. அதுமட்டுமின்றி “இத்தனை வருடங்களுக்குப் பிறகும், விஞ்ஞானிகள் சந்திர கிரகணங்களிலிருந்து சந்திரனைப் பற்றி பல அரிய தகவல்களை இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்” என்றும் நாசா தெரிவித்துள்ளது.