குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்றியோ, கணவரால் ஏற்படும் பொதுவான குறைபாடுகள் பற்றிய சிந்தனையிலோ பெண்கள் சிக்கிக்கொள்வதால் அவர்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவதில்லை.
சர்வேயை ஆதாரமாகவைத்து செக்ஸாலஜிஸ்ட்டுகள் மிக முக்கியமான விஷயங்களை சுட்டிக்காட்டுகிறார்கள். அதன் விவரம்:
“பெண்களிடம் பாலியல் விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களது பாலியல் செயல்பாட்டிற்கு தற்போதைய இயந்திரமய வாழ்க்கைமுறை எதிராக அமைந்திருக்கிறது. அதனால் பெண்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவது குறைந்து வருகிறது. குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்றியோ, கணவரால் ஏற்படும் பொதுவான குறைபாடுகள் பற்றிய சிந்தனையிலோ பெண்கள் சிக்கிக்கொள்வதால் அவர்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவதில்லை.
அதனால் தம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி ஏற்படாமல் போய் விடுகிறது. திருப்தியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். திருப்தியடையாத பெண்கள் கணவரிடம் எரிச்சல்படுகிறார்கள். அது கோபமாகவும், சில நேரங்களில் பகையாகவும் மாறுகிறது. இந்த நிலையை மாற்ற பெண்கள் முன்வரவேண்டும். அதற்கு கணவரின் பங்களிப்பு மிக முக்கியம்.
பெண்கள் பாலுறவில் திருப்தியடைய அவர்கள் அந்த நேரத்தில் தங்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்தவேண்டும். அப்போது வேறு எதையும் பற்றி சிந்திக்கக்கூடாது. பொதுவாக இரவு நேர உறவின்போது, ‘நாளை என்ன சமையல் செய்வது?’ என்ற யோசனையில் பெரும்பாலான பெண்கள் ஆழ்ந்துபோகிறார்கள்.
‘இந்த நேரம் பார்த்து குழந்தை விழித்துவிட்டால் என்ன செய்வது?’ என்ற கவலையும் அவர்களை வாட்டுகிறது. இதை எல்லாம் புரிந்துகொண்டு கணவனும்- மனைவியும் திட்டமிட்டு மனஅமைதியோடு தாம்பத்யத்தில் ஈடுபடவேண்டும். மனைவியின் அன்றாட வேலைகளை கணவரும் பங்கிட்டு, மனைவி சுமைதாங்கியாக ஆகாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.
தாம்பத்ய உறவு மனதுக்கு மகிழ்ச்சியையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். திருப்தியான உறவுக்கு பின்பு தம்பதி களிடையே அதுவரை இருந்த மனக் கசப்புகள் அனைத்தும் அடியோடு நீங்கி, புதிதாய் இணைந்த ஜோடிபோல் குதூகல மாய் வாழ்க்கையை நகர்த்துவார்கள். அடுத்த முறை இணை வதையும் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள்.
தாம்பத்யத்திற்கு பின்பு உடல்வலியும், தலைவலியும் நீங்கும். உடல் நெகிழ்ச்சி யாகி அதில் சுறுசுறுப்புடன் தங்கள் பணிகளை செய்வார்கள். தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டவர்கள், நன்றாக தூங்கவும் செய்வார்கள். திருப்தியான உறவு தம்பதிகளுக்குள் புதிய நம்பிக்கையை உருவாக்கி, அவர்களை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்லும்” என்றும் சொல்கிறார்கள்.