நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வருபவர், இவருக்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது.
பிகில், விஸ்வாசம் என மாஸ் ஹீரோ படங்கள் மட்டுமின்றி பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் நயன்தாரா.
மேலும் நயன்தாரா மற்றும் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம். மேலும் இவர்கள் தங்களது ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பின் கீழ், பல படங்களை சேர்ந்து தயாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் அறிமுக இயக்குநர் வினோத் ராஜின் இயக்கத்தில் கூழாங்கல் திரைப்படத்தை தயாரித்திருந்தனர். மேலும் இந்த படம் ஏற்படுத்திய தாக்கம் அனைவருக்கும் சென்று சேரும் வகையில் சர்வதேச பட விழாக்களுக்கு அனுப்பவிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
அந்த வகையில் கூழாங்கல் திரைப்படம் தற்போது ‘Shanghai’ சர்வதேச திரைப்பட விழாவிலும் தேர்வாகி உள்ளதால், மரியாதையாகவும், பெருமிதமாகவும் உணர்வதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Yesssss we got selected for #Shanghai #internationalFilmFestival toooo
Honoured & proud ❤️❤️❤️ @PsVinothraj @thisisysr @Rowdy_Pictures #Nayanthara @AmudhavanKar #ShanghaiInternationalFilmFestival2021 https://t.co/UeK4tQiANA
— Vignesh Shivan (@VigneshShivN) June 10, 2021