யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யாழ் குடாநாட்டில் பயணத் தடையினை மீறி வீதிகளால் அதிகமானோர் பயணிப்பதை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாண காவல்துறையினரால் தொடர்ந்து விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆகவே இத்தகையவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்காகவே இந்த விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது பயணத் தடையை மீறி செயற்பட்ட சிலர் கடுமையாக பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டு, வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.